சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோயில் அலங்கார ஆரத்திகள்.
சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோயில் வியாழக்கிழமை இரவு அலங்கார ஆரத்திகள் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகர் குண்டு ஊரணி பகுதியில் அமைந்துள்ள, அருள்மிகு ஶ்ரீ சீரடி சாய்பாபா திருக்கோவிலில் குருவார வியாழக்கிழமை திருநாளை முன்னிட்டு சிறப்பு இரவு அலங்கார ஆரத்திகள் நடைபெற்றது.

முன்னதாக சாய் பாபாவுக்கு பால் பன்னீர் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சாய்பாபாவுக்கு பட்டு வஸ்திரம் அணிவித்து மலர் மாலைகளால் சிறப்பாக அலங்காரம் நடைபெற்றது. இதனை அடுத்து தீப தூப ஆராதனை காண்பித்து ஒரு முகம் இரண்டு முகம் மூன்று முகம் நான்கு முகம் மற்றும் ஐந்து முகம் கொண்ட தீப ஆராத்தி காண்பிக்கப்பட்டது.
பின்னர் சொடச உப சேவைகள் நடைபெற்று நிறைவாக தீப ஆராதனை காண்பிக்கப்பட்டன. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சாய் பாபா சுவாமியை வழிபட்டனர்.


