in

சிவகங்கை வீரமாகாளியம்மன் திருக்கோவில் பூச்சொரிதல் திருவிழா கொடியேற்றம்

சிவகங்கை வீரமாகாளியம்மன் திருக்கோவில் பூச்சொரிதல் திருவிழா கொடியேற்றம்

 

சிவகங்கை அருள்மிகு வீரமாகாளியம்மன் திருக்கோவில் பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றம் வைபவம் நடைபெற்றன.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் அமைந்துள்ள மிகப் பிரசித்தி பெற்ற அருள்மிகு அன்னை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் திருக்கோவில் ஆனி மாத 71 ஆம் ஆண்டு பூக்கரக பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு கொடியேற்ற வைபவம் விமர்சியாக நடைபெற்றது.

முன்னதாக மூலவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டன தொடர்ந்து அம்மன் சன்னதி முன்பு புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களை வைத்து யாக குண்டம் அமைத்து கணபதி பூஜையுடன் யாக பூஜைகள் தொடங்கியது.

இதனை அடுத்து கொடிமரத்தில் அம்மன் உருவம் வரையப்பட்ட கொடி வஸ்திரத்தை வேத மந்திரங்கள் கொடியேற்றப்பட்டது.

தொடர்ந்து தர்ப்பைப் புல் பட்டு வஸ்திரம் பூமாலைகள் அணிவிக்கப்பட்டு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டன நிறைவாக மகா பஞ்சமுக கற்பூர ஆராதனை காண்பிக்கப்பட்டன.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ வீரமாகாளி அம்மனை வழிபட்டனர்.

What do you think?

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட, 25-வது மாநாடு தொடக்கம்

மகா சங்கம..திற்கு போட்டியாக…பாண்டியன் ஸ்டோர்ஸ் ஸ்பெஷல் எபிசொட்