சித்திரை மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு வெள்ளி கவச அலங்காரம்
நாமக்கல், பாலப்பட்டி கதிர்மலை முருகன் ஆலயத்தில் சித்திரை மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு வெள்ளி கவச அலங்காரம்
நாமக்கல் மாவட்டம் பாலப்பட்டியில் உள்ள அருள்மிகு கதிர்மலை முருகன் ஆலயத்தில் சித்திரை மாத வளர்பிறை சஷ்டியை முன்னிட்டு மூலவர், முருகப்பெருமானுக்கு பஞ்சாமிருதம் தேன் பால் தயிர் மஞ்சள் சந்தனம் என பல்வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம்.
பின் வெள்ளிகவச அலங்காரம் செய்த பின் அலங்கார தீபம் பின் மகாதீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.