in

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிர்ச்சி தரும் வானிலை!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிர்ச்சி தரும் வானிலை!

 

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு அதிர்ச்சி தரும் வானிலை!
இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு; மீனவர்கள் அவசரம் வேண்டாம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு வானிலையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதால், இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பல மாவட்டங்களில் வெளுத்து வாங்கக்கூடும்.

நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. பிற தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி வலுப்பெற வாய்ப்புள்ளதால், தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் அடுத்த சில நாட்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தாலும், திடீர் மழையால் நகரின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், பயணங்களைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

What do you think?

திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் அலங்கார மின்விளக்கு ஒளியில் ஜொலிக்கும் திருமலை

தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்