in

கன மழை காரணமாக தனியார் அரிசி ஆலை மதில் சுவர் இடிந்து விழுந்து ஆடுகள் பலி

கன மழை காரணமாக தனியார் அரிசி ஆலை மதில் சுவர் இடிந்து விழுந்து ஆடுகள் பலி

 

ராஜபாளையம் அருகே இரவில் பெய்த கன மழை காரணமாக தனியார் அரிசி ஆலை மதில் சுவர் இடிந்து விழுந்து இடிபாடுகளுக்குள் சிக்கி ரூ. 30 லட்சம் மதிப்பிலான நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியானது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே இளந்திரை கொண்டான் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மையப்பபுரம் கிராமத்தை சேர்ந்த முருகன் மூன்று தலைமுறைகளாக ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வருகிறார்.

ஊருக்கு வெளியே கிடை போட்டு பராமரித்து வந்த நிலையில் தற்போது மழைக்காலம் என்பதால் ஊருக்குள் உள்ள தனது சொந்த நிலத்தில் கிடை அமைத்து ஆடுகளை வளர்த்து வந்தார்.

தமிழகம் முழுவதும் தற்பொழுது வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார நேற்று இரவு சுமார் 4 மணி நேரம் கனமழை பெய்தது.

மழை பெய்த போது முருகன் ஆடுகளை பராமரித்து வந்த இடத்தின் அருகே இருந்த தனியார் அரிசி ஆலையின் மதில் சுவர் இடிந்து ஆடுகளின் மேல் விழுந்தது. இந்த இடுப்பாடுகளுக்குள் சிக்கி ரூபாய் 30 லட்சம் மதிப்பிலான நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகள் பரிதாபமாக பலியானது.

தகவல் அறிந்து வந்த தளவாய்புரம் காவல்துறையினர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த ஆடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு முருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

What do you think?

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

மயிலாடுதுறையில் ஐப்பசி முதல் நாள் முன்னிட்டு பக்தர்கள் காவிரியில் புனித நீராடினர்