மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் சித்திரை மாத சக்தி கரகம் வீதி உலா
மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயிலில் சித்திரை மாத சக்தி கரகம் வீதி உலா வெகுவிமர்சியாக நடைபெற்றது – லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோயில் பிரசித்தி பெற்ற சக்தி திருத்தலங்களில் ஒன்றாகும். இத்திருத்தலத்தில் மாதந்தோறும் அம்மாவாசை தினத்தன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று அமாவாசை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் அங்காளம்மனுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு,மகா தீபாராதனை நடைபெற்றது.
உற்சவர் அங்காளம்மன் ஞானபிரசுனாம்பிகை உடனுறை காளகத்தீஸ்வரர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.
அதனைத் தொடர்ந்து நள்ளிரவு அக்னி குளக்கரையில் சக்தி கரகம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு பின்னர் பூசாரிகளின் வழக்கப்படி பூஜைகள் செய்யப்பட்டு ராஜசேகர் பூசாரியின் மீது சக்தி கிரகம் அமர வைத்து மேல்மலையனூர் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடைபெற்றது.
வருடத்தில் இரண்டு முறை மட்டுமே இந்த சக்தி கிரகம் நடைபெறும் ஒன்று மாசி பெருவிழா மற்றொன்று சித்திரை மாதம்.
இதன் ஐதிகம் அங்காள பரமேஸ்வரி சக்தி கரகம் வடிவில் வீதி உலா வந்து மேல்மலையனூரை காத்து வந்ததாக ஐதீகமாக கூறப்படுகிறது சித்திரை மாத அமாவாசை அன்று ஊஞ்சல் உற்சவம் இல்லை.மற்ற அமாவாசை தினங்களில் வழக்கம் போல் ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்,

சித்திரை மாத அமாவாசை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பாக சிறப்பு பேருந்துகளும்,
விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான 800 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் பள்ளிகள் விடுமுறை என்பதால் பக்தர்கள் தங்கள் குழந்தைகளுடன் சித்திரை மாதம் அமாவாசையில் நடைபெறும் சக்தி கரகத்தை காண வந்ததால் வளத்தி மேல்மலையனூர் செல்லும் சாலையில் அரசு சார்பில் விடப்பட்ட பேருந்துகள் சுமார் மூன்று கிலோ மீட்டருக்கு மேல் அணி வகுத்து நின்றதால் பக்தர்கள் சுமார் 4 கிலோ மீட்டர் நடந்தே சென்று அங்காளம்மனை வழிபட்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


