ஷாரூக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி
ஐபிஎல் (IPL) கிரிக்கெட்னாலே எப்போவும் ஏதாவது ஒரு சர்ச்சை ஓடிக்கிட்டு தான் இருக்கும்.
இப்போ இந்த 2026 சீசனுக்காக ஷாரூக்கானின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை ஏலத்துல எடுத்திருக்காங்க.
இதுதான் இப்போ பெரிய அரசியல் புயலை கிளப்பியிருக்கு! பிரபல இந்து சாமியார் ஜகத்குரு ராம்பத்ராச்சார்யாவும் இந்த விவகாரத்துல ஷாருக்கானை விமர்சிச்சிருக்காரு.
“ஷாருக்கானோட மனநிலை எப்போவும் இப்படித்தான் இருக்கு, ஆனா அரசு இதை சகிச்சுக்காது. இந்துக்களோட உதவியால தான் வங்கதேசமே உருவாச்சுங்கிறதை அந்த நாட்டுக்கு புரிய வைக்கணும்”னு அவர் சொல்லியிருக்காரு.
வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரகுமான் ஏற்கனவே ஐபிஎல்-ல சென்னை உட்பட பல டீம்ல விளையாடினவர் தான்.
ஆனா இப்போ இருக்குற சூழல்ல, அவரை கொல்கத்தா டீம் எடுத்ததுக்கு மகாராஷ்டிரா அரசியல்ல இவ்வளவு எதிர்ப்பு கிளம்புறது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கு.
ஷாரூக்கானோட இந்த முடிவுக்கும், சிவசேனாவோட இந்த எதிர்ப்புக்கும் இடையில ஐபிஎல் களம் இப்போவே சூடுபிடிக்க ஆரம்பிச்சிருச்சு!
