செஞ்சிக் கோட்டை கமலக்கண்ணி அம்மன் ஆலய தேர்த் திருவிழா
செஞ்சிக் கோட்டையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கமலக்கண்ணி அம்மன் ஆலய தேர்த் திருவிழாவில் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற செஞ்சிக் கோட்டையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ கமலக்கண்ணி அம்மன் ஆலய தேர்த்திருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெற்று வருவது வழக்கம்.
இந்த ஆண்டு கமலக்கண்ணி அம்மன் ஆலய திருவிழா கடந்த மே 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனிடையே ஒன்பதாம் நாளான இன்று தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்த தேர் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
முன்னதாக செஞ்சிக் கோட்டையில் அமைந்துள்ள கமலக்கண்ணி அம்மன் ஆலயத்தில் இன்று காலை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சூலம் பம்பை மேளம் முழங்க கொண்டு வந்தனர். அப்பொழுது அக்கா தங்கையான கமலக்கண்ணி அம்மன் மற்றும் மாரியம்மன் பூங்கரகம் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது பக்தர்கள் பக்திப் பரவசத்தில் கோவிந்தா.. கோவிந்தா.. என கோஷமிட்டு அம்மனை வழிபட்டனர்.இந்த ஆண்டு நடைபெறும் தேர்த் திருவிழாவில் மாலை தொடங்கியது. இதில் செஞ்சி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் இந்த திருவிழாவில் கலந்து கொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இந்த பிரம்மாண்ட தேர் செஞ்சி எம்ஜிஆர் நகர் மந்தவெளியில் தொடங்கி திருவள்ளுவர் தெரு, திருவண்ணாமலை சாலை, விழுப்புரம் சாலை,சத்திர தெரு வழியாக திருக்கோவிலில் அடைந்தது.
மேலும் கமலக்கண்ணி அம்மன் விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து குல வழிபாடு செய்யும் பக்தர்கள் காலையில் கோவிலில் பொங்கல் வைத்து சாமிக்கு படையல் இட்டு வழிபட்டனர்.
மேலும் திருத்தேர் வீதி உலாவின் போது திருத்தேரின் முன் மேளதாளம் முழங்க, சிவ வாத்தியங்களுடன்,டிஜே இசையில் சினிமா பாடல்களுக்கு இளைஞர்கள் நடன மாடி மகிழ்ந்தனர்.
பக்தர்களின் பாதுகாப்புக்காக செஞ்சி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செஞ்சி நகரில் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.