ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ.
கலைஞரின் 102 வது பிறந்த நாள் விழா-தாயனூர் ஊராட்சியில் 1000 நபர்களுக்கு ரூ 5 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை விழுப்புரம் மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ வழங்கினார்.
விழுப்புரம் வடக்கு மாவட்டம் மேல்மலையனூர் ஒன்றியம் தாயனூர் ஊராட்சியில் கலைஞரின் 102 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு 1000 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேல்மலையனூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையில் மேல்மலையனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சாந்தி சுப்பிரமணியன், மாவட்ட கவுன்சிலர் செல்வி ராமசரவணன் ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர்லாவண்யா ராஜேஷ் குமார் அனைவரையும் வரவேற்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில்,
விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் 102 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு 1000 நபர்களுக்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் ஒன்றிய துணை சேர்மன் விஜயலட்சுமி முருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் கலா நாராயண மூர்த்தி, யசோதரை சந்திரகுப்தன், ஜெயலட்சுமி தஷ்ணாமூர்த்தி, விஜயகுமார், ஊராட்சி மன்ற துணை தலைவர் கீதா முனியன், ஒன்றிய நிர்வாகிகள் செல்வம், எஸ்.பி. சம்பத், தோப்பு சம்பத், அரிதாஸ், ரகுராமன், இளைஞர் அணி அமைப்பாளர்
மணிகண்டன், துணை அமைப்பாளர்கள் மணியரசன், சக்திவாசன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தாஸ், தாயனூர்ஊராட்சி நிர்வாகிகள் சீதாராமன், செல்வம், சிவா, தாஸ், ராமச்சந்திரன், முருகன், சேகர், ரஜினி , வளத்தி ஏழுமலை,ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் தயாநிதி, சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் கஜேந்திரன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஊராட்சி மன்ற தலைவர் லாவண்யா ராஜேஷ்குமார் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். நிகழ்ச்சியின் முடிவில் பிரியா சதீஷ் அனைவருக்கும் நன்றி கூறினார்.


