இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா
நடிகரும் தமிழக வெற்றிகழகத்தின் தலைவரும் ஆன விஜய் இந்த ஆண்டு பத்தாம் மற்றும் 12…ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் ஊக்க தொகை வழங்கி வருகிறார்.
மாமல்லபுரத்தில் உள்ள ஷெர்டன் ஹோட்டலில் இந்த விருது வழங்கும் விழா மூன்று கட்டங்களாக நிகழ்த்தப்படுகிறது.
முதல் கட்டமாக கடந்த வெள்ளிக்கிழமை 600 மாணவ மாணவிகளுக்கு விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்கி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு மேடையில் நீண்ட உரையை நிகழ்த்தினர்.
இரண்டாம் கட்ட கல்வி விருது விழா இன்று நடைபெருகிறது 18 மாவட்டங்களில் 75 தொகுதிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்த விழா காலை 10 மணி அளவில் தொடங்கியது.
மேடைக்கு வந்த விஜய் மாணவ மாணவியுடன் சிறுது நேரம் உரையாடிவிட்டு நேரடியாக பரிசுகளை வழங்கினார்.
இந்த விழாவில் அவர் எந்த உரையையும் நிகழ்த்தவில்லை அடுத்த கட்ட விழாவிலும் அவர் உரை நிகழ்த்த மாட்டார்.


