உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் மனித சங்கிலி
உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு டார்கெட் கல்விக் குழுமத்தின் எவரெஸ்ட் கென்பிரிட்ஜ்( CBSE) பள்ளி மாணவர்கள் மனித சங்கிலி நடத்தினார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு டார்கெட் கல்விக் குழுமத்தின் எவரெஸ்ட் கென்பிரிட்ஜ்( CBSE) பள்ளி மாணவர்கள் மனித சங்கிலி நடத்தினார்.
நிகழ்ச்சிக்குப் பள்ளியின் நிறுவனத் தலைவர் தாளாளர் மோகன்ராஜ் தலைமையில் பள்ளியின் பொருளாளர் செந்தில்குமார் முன்னிலையில் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை போக்குவரத்து காவல்துறை அதிகாரி மணியரசன் கலந்து கொண்டார்.

உடன் நிகழ்ச்சிக்கு பள்ளியின் இயக்குனர் மீனாமோகன்ராஜ் பள்ளியின் முதல்வர் ஹரிஹரசுதன் பள்ளியின் துணை முதல்வர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் சுமார் 500 மாணவர்கள் மனித சங்கிலி நிகழ்வில் கலந்துகொண்டு இரத்த தானம் குறித்த முழக்கங்களை எழுப்பி பொதுமக்களிடம் இரத்த தானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


