சங்கரன் கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் சித்திரை பிரம்மேற்ச்சவ திருவிழா கொடியேற்றம்
சங்கரன் கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் சித்திரை பிரம்மேற்ச்சவ திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது – திரளான பக்தர்கள் பங்கேற்பு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவ ஸ்தலங்களில் ஒன்றாகும் . இங்கு ஆண்டுதோறும் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா பத்து நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
விழா நாட்களில் காலை மாலை இருவேளைகளிலும் சுவாமி அம்பாள் வீதி உலா வருவது வழக்கம். இந்த ஆண்டிற்கான சித்திரைத் திருவிழா இன்று காலை 5.40 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகியது.
கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமி
அம்பாளுக்கு சிறப்பு அபிசேகம் அலங்காரம் செய்யப்பட்டது தொடர்ந்து கொடிப்பட்ட வீதியுலா நடைபெற்றது.
தொடர்ந்து சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடிமரத்தில் மஞ்சள் பால், திரவியம் பண்ணீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட வாசனா திறவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு மலர்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாரதனை நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் 10 நாள் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான மே 9ம் தேதி வெள்ளிக்கிழமை காலை நடைபெற உள்ளது.
சித்திரை பிரம்மோற்சவ திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகப்படி தாரர்கள் செய்திருந்தனர்.