நாமக்கல் பரமத்தி வேலூர் பெத்தாண்டார் ஆலயத்தில் ஆடி18 முன்னிட்டு சந்தன காப்பு அலங்காரம்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் தேரடி வீதியில் பல நூறு ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பெத்தாண்டவர் ஆலயத்தில் ஆடி 18ஆம் நாளினை முன்னிட்டு பெத்தாண்டவருக்கு தேன் பஞ்சாமிர்தம் பால் தயிர் திருமஞ்சனம் அரிசி மாவு இளநீர் மஞ்சள் சந்தனம் பன்னீர் போன்ற பல வகை வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் செய்து உதிரிப் பூக்களினால் அர்ச்சனைகள் செய்து பஞ்சாரத்தியுடன் ஏகாரத்தி காண்பிக்கப்பட்டது.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.


