பாபநாசத்தில் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் சலங்கை நாதம் நடன நிகழ்ச்சி
தஞ்சை மாவட்டத்தில் பாபநாசத்தில் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் சலங்கை நாதம் நடன நிகழ்ச்சி ….
போலீஸ் துணை சூப்பரண்டு தொடங்கி வைத்தார் ….
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் 3 நாள் நடைபெறும் சலங்கை நாதம் நடன நிகழ்ச்சி தொடங்கியது.
முன்னாள் தென்னகப் பண்பாட்டு மைய இயக்குனர் குணசேகரன் தலைமை வகித்தார்.
பாபநாசம் போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் முருகவேல் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
விழாவில் ஜம்மு காஷ்மீர், ஒடிசா, சிக்கிம், பாண்டிச்சேரி ,தெலுங்கானா, ஜார்க்கண்ட், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடன கலைஞர்கள் பங்கேற்று தலைச்சிறந்த நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் பங்கேற்று நடன நிகழ்ச்சியை கண்டுகளித்தனர்.