மாதாந்திர பூஜைக்காக இன்று (ஜூலை 16 ம் தேதி) திறக்கப்பட்டது சபரிமலை நடை!
* மலையாள “கருக்கிடகம்” மற்றும் தமிழின் “ஆடி” மாதங்களின் மாதாந்திர பூஜைக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது. ஜூலை 21ம் தேதி வரை வழக்கமான மாதாந்திர பூஜைகள் நடக்கும்.
* இன்று மாலை 5 மணிக்கு தந்திரிகள் கண்டரரு ராஜீவரு மற்றும் கண்டரரு பிரம்மதத்தன் தலைமையில், மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி, நடைதிருந்து யோக நித்திரையில் இருக்கும் ஐயப்பனுக்கு தீபம் காட்டி நிர்மல்ய பூஜை, கணபதி ஹோமத்துடன் வழக்கமான பூஜைகளை துவக்கினார்.
* தொடர்ந்து, கற்பூர ஆழியில் தீபம் ஏற்றியதும் பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
* ஜுலை 21-ம் தேதி வரை தினமும் நெய் அபிஷேகம், புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், படி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
* தினமும் காலை 5 மணிக்கு நடை திறந்து பக்தர்கள் தரிசனத்திற்குப் பின் இரவு 10மணிக்கு “ஹரிவராசனம்” பாடி நடை அடைக்கப்படும்.
* இதற்காக, “வெர்ச்சுவல் க்யூ” மூலம் பக்தர்களுக்கான “ஆன்-லைன்” முன்பதிவு நடந்து வருகிறது.

* பக்தர்கள், தரிசனத்திற்காக sabarimalaonline.org.in என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* ஏற்னவே பிரசித்தி பெற்ற சபரிமலை சன்னிதானத்தில் மாளிகைபுரத்து அம்மன் கோயில் அருகே நிறுவப்பட்ட புதிய நவக்கிரக கோயிலுக்கான பிரதிஷ்டை, ஜூலை 13ம் தேதி மேள தாளம் முழங்க வெகு விமர்சையாக நடந்தது.
* “பிரதிஷ்டை” தினமான ஜுலை 13ம் தேதிக்காத, ஜுலை 11ம் தேதி நடை திருக்கப்பட்டு, ஜுலை 13ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர்.


