கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டம்
தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்களின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
இரண்டாம் நாளாக தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் (டிட்டோஜாக்) சங்கங்கள் சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தொடர் போராட்டத்தை அறிவித்திருந்தது.
இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
மத்திய அரசு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்திற்கு இணையாக தமிழக இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஊதியம் வழங்கப்பட வேண்டும்
தொடக்கக் கல்வியில் பணியாற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வு பெறுவதை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும்.
கல்வித்துறையில் காலியாக உள்ள 6 ஆயிரம் மேற்பட்ட தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பதவி உயர்வு பணியிடங்களை மற்றும் தமிழகம் முழுவதும் காலியாக உள்ளது அனைத்து ஆசிரியர் பணியிடங்களையும் விரைந்து நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர் இதனால் தேனி – மதுரை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை கைது செய்து மாலை விடுவிக்கப்பட்ட நிலையில் இன்றும் அதே கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.