in

கடுகப்பட்டு ஊராட்சியில் பேருந்து வசதி கோரி கிராம பொதுமக்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் 

கடுகப்பட்டு ஊராட்சியில் பேருந்து வசதி கோரி கிராம பொதுமக்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் 

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த வல்லம் ஒன்றியத்துக்குட்பட்ட கடுகப்பட்டு ஊராட்சியில் பேருந்து வசதி இல்லாததால், அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள், முதியவர்கள் ஆகியோர் கிராமத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் நடந்து சென்று வருவதாகவும், இரவு நேரங்களில் கிராமத்திற்கு செல்ல பேருந்து வசதிகள் இல்லாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாவதாக கூறுகின்றனர்.

இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும்,கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் அமைத்தும், இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனை தொடர்ந்து திமுக கட்சியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா மகேஷ் தலைமையில் அப்பகுதி கிராம மக்கள் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் காரணமாக கடுக்கப்பட்டு கிராம மக்கள் செஞ்சியில் இருந்து வெடால் செல்லும் சாலை மேல் ஒலக்கூர் என்ற பகுதியில் இரண்டு அரசு பேருந்துகளை பொதுமக்கள் சிறை பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் காத்திருந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செஞ்சி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து பேருந்து விடுவதாக உறுதி அளித்தால் சாலை மறியலில் கை விடுவதாக கிராம மக்கள் தெரிவித்ததன் பேரில் ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமாக வந்த செஞ்சி அரசு பணிமனை அதிகாரிகள் பொதுமக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேருந்து வசதி குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி ஒரு வார காலத்தில் பேருந்து வசதி ஏற்படுத்தி தரப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர்.

திமுக ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா மகேஷ் கூறுகையில் எங்க கிராமத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளாக பேருந்து வசதி கோரி போராடி வருவதாகவும்,பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வரும் சட்டமன்ற தேர்தலில் எங்கள் கிராமத்திற்கு வரும் வேட்பாளரை கிராமத்தில் அனுமதிக்காமல் தங்கள் இல்லங்களில் கருப்பு கொடி கட்டி தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்தார்.

கிராம பொதுமக்களுடன் ஆளும் திமுக கட்சியின் ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா மகேஷ் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

What do you think?

தஞ்சையில் புதிய நகைக்கடையை திறந்து வைத்தார் நடிகர் ரவி மோகன்..

அமெரிக்கா -ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் குறைந்து அமைதி நிலவ வேண்டி மதுரையில் சிறப்பு பிரார்த்தனை