in

ஓஎன்ஜிசி நிறுவனம் மீது குற்றம் சாட்டி, மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை

ஓஎன்ஜிசி நிறுவனம் மீது குற்றம் சாட்டி, மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை.

 

மயிலாடுதுறை அருகே பழைய கிணறுகளை புதுப்பிப்பதாக தெரிவித்து ஓஎன்ஜிசி நிறுவனம் புதிய கிணறு தோண்டும் பணியில் ஈடுபடுவதாக, மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டு, ஆய்வு நடத்தி தடுத்து நிறுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த காளி என்ற இடத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கு சொந்தமான எண்ணெய் கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் பராமரிப்பு பணிகள் செய்வதாக தெரிவித்து ஓஎன்ஜிசி நிறுவனம் இயந்திரங்கள் மற்றும் வாகனங்களை அப்பகுதியில் நிறுத்தி உள்ளது.

பழைய கிணறை புதுப்பிப்பதாக தெரிவித்து புதிதாக துரப்பண பணிகளில் ஓஎன்ஜிசி நிறுவனம் மறைமுகமாக ஈடுபடுவதாக மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக அந்த இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மீத்தேன் ஜெயராமன் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அந்த அமைப்பினர் மனு அளித்தனர்.

இதில் மூன்று நாட்கள் நடைபெற வேண்டிய புதுப்பிக்கும் பணி ஒன்றரை மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் புதிய கிணறுகள் தோண்டும் பணியில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஈடுபட்டுள்ளதா என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற சட்டத்தை செயலிழக்க செய்யும் நடவடிக்கையில் ஓஎன்ஜிசி நிறுவனம் ஈடுபட்டுள்ளது என பேராசிரியர் மீத்தேன் ஜெயராமன் குற்றம் சாட்டியுள்ளார்.

What do you think?

இன்று வெளியாகுமா கூலி First சிங்கள்

ஆளில்லாமல் கரை ஒதுங்கிய பைபர் படகு போலீசார் விசாரணை