ரிலீஸ்..இக்கு முன்பே பாராட்டுகளை குவிக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி.. அப்போ ரெட்ரோ நிலைமை??
இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கிய டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தில் சசிகுமார், யோகி பாபு ,சிம்ரன், M.S. பாஸ்கர் உள்ளிடோர் நடித்திருக்கின்றனர்.
மே ஒன்றாம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள சூர்யா நடித்த ரெட்ரோ…வுடன் போட்டிக்கு தயாராக உள்ளது.
டூரிஸ்ட் ஃபேமிலி. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரெட்ரோ படத்துடன் Low பட்ஜெட் படமான டூரிஸ்ட் ஃபேமிலி ..யை ஏன் மோத விடுகிறிர்கள் என்று தயாரிப்பாளர் யுவராஜ் கணேஷ்…ஷிடம் கேட்கையில் சூர்யா சார் படத்துடன் மோத வேண்டும் என்பதெல்லாம் எங்களுடைய இன்டென்ஷன் கிடையாது.
இப்பொழுது எல்லாம் படத்தின் ரிலீஸ் தேதியை ஓடிடி தளங்கள் தான் முடிவு செய்கிறது அதனால் தான் மே ஒன்றாம் தேதி ரிலீஸ் செய்கிறோம்.
டூரிஸ்ட் ஃபேமிலி, ரெட்ரோ, படத்துடன் நானி நடித்த ஹிட்: தி தேர்ட் கேஸ் படமும் வெளியாகிறது.
டூரிஸ்ட் ஃபேமிலி OTT..யில் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது திரையரங்குகளில் வெளியாவத்திற்கு காரணம் இந்த படத்தை செலிப்ரிட்டி ஷோ…வுக்காக திரையிட்ட போது அனைவரும் படத்தை பாராட்டி இந்த ஆண்டில் சிறந்த திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி என Certificate கொடுத்தால் நேரடியாக தியேட்டரில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.