செஞ்சி வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம்
செஞ்சி வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம் போக்குவரத்து பாதிப்பு.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு நூற்றுக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டம்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சொரககொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த காமராஜ் வயது 54, இவர் செஞ்சியில் வழக்கறிஞராக பணியாற்றி வந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பாக மர்ம நபர்கள் காமராஜை வெட்டி படுகொலை செய்தனர்.
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 12 நபர்களில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியான சுமன் உட்பட 7 நபர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், வழக்கறிஞர் காமராஜ் படுகொலையை கண்டித்தும், வழக்கறிஞர் பாதுகாப்பு சிறப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த செஞ்சி பொறுப்பு காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் பேசி சமாதானம் செய்தார்.
இந்த சாலை மறியல் போராட்டத்தால் புதுச்சேரி-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு.