நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அதிரடி பரவலாக சாரல் மழை
நாகப்பட்டினம் மாவட்டத்தில் டித்வா புயல் புயல் காரணமாக இன்று நாளையும் ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காலை முதல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடல் சேற்றமாகவும் மாவட்ட முழுவதும் மந்தமான வானிலை நிலவி வந்தது.
மாலை நேரம் முதல் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை அறிவித்திருந்த நிலையில் தற்போது மாவட்ட முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக நாகை நாகூர் வெளிப்பாளையம் புத்தூர் சிக்கல் திருக்குவளை கீழ்வேளூர் வேளாங்கண்ணி தலைஞாயிறு வேதாரணியம் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.


