மிஸஸ் & மிஸ்டர் பட ரிலீஸ் போஸ்டரை வெளியிட்ட ரஜினிகாந்த்
நடிகை வனிதா விஜயகுமார் தனது வரவிருக்கும் மிஸஸ் & மிஸ்டர் படத்தை இயக்கியும் நடித்தும் இருக்கிறார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட டிரெய்லரில் 40 வயதுக்கு மேற்பட்ட ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குழந்தை பெறுவதா இல்லையா என்ற குழப்பத்தில் மூழ்கி, அத்தகைய முடிவுகளால் வரும் சமூக அழுத்தங்கள் மற்றும் தனிப்பட்ட மோதல்களை பற்றி சொல்லும் கதை.
வனிதா விஜயகுமார், ராபர்ட், ஸ்ரீமன், ஷகிலா, செஃப் தாமு, பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் பல முகங்கள் நடிக்கின்றனர்.
சுவாரஸ்யமாக, இந்தப் படத்தை வனிதாவின் மகள் ஜோவிதா தயாரித்துள்ளார், ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ள மிஸஸ் & மிஸ்டர் திரைப்படம் வனிதா விஜயகுமாரின் அம்மா மஞ்சுளாவின் பிறந்த நாளான July 4ஆம் தேதி வெளியாக உள்ளது.
பார்த்திபனிடம் உதவி இயக்குனராக இருந்த ஜோவிதா இப் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகம் ஆகி இருக்கிறார்.
இப்படத்தின் ப்ரோமோஷனில் பெசியாக இருக்கும் வனிதா விஜயகுமார் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து படத்தின் பிரமோஷன் போஸ்டரை ரஜினிகாந்திடம் கொடுத்து ரிலீஸ் செய்ய சொல்ல தனது நீண்ட நாள் நண்பரான விஜயகுமார் மகளின் அன்பான கோரிக்கையை மகிழ்ச்சியுடன் ஏற்று போஸ்டரை வெளியிட்டார்.
வனிதா மற்றும் ஜோவிதாவை அன்புடன் அனைத்து கொண்டிருக்கும் புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது.


