in

தாய்லாந்தில் ரஜினி சார் அசத்திவிட்டார்

தாய்லாந்தில் ரஜினி சார் அசத்திவிட்டார்


Watch – YouTube Click

 

இன்னும் ஒரு சில நாட்களில் கூலி ரிலீஸ் ..இக்கு ரசிகர்கள் வெயிட் பண்ணி இருக்கும் நிலையில் கூலி ப்ரோமோஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்ற வாரம் சென்னையில் பிரமாண்டமாக ஆடியோ லான்ச் நடைபெற்ற நிலையில் ஹைதராபாத்தில் நடந்த கூலி பட விழாவில் நடிகர் நாகார்ஜுனா நடிகர் ரஜினிகாந்த்…தை பற்றி நெகிழ்ச்சியாக பகிர்ந்து கொண்டார்.

நான் அன்னமய்யா (Annamayya) படத்தில் நடித்த பொழுது ஏன் இப்படி ஒரு கதையை தேர்வு செய்தீர்கள் என்று பலர் என்னை கேலி செய்தனர். ஆனால் எனக்கு வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்க வேண்டும்.

லோகேஷ் உடன் பணியாற்ற வேண்டுமென்று ஆசைப்பட்டேன். லோகி கதை சொன்ன போது எனக்கு பிடித்தது. அவரிடம் நான் கேட்ட முதல் கேள்வியே ரஜினி சார் இந்த கதை..இக்கு ஓகே சொன்னாரா…. என்று. ஏனென்றால் கதையில் சைமன் கதாபாத்திரம் தான் ஹீரோ போல இருக்கும் லோகேஷ் ஹீரோவையும் வில்லனையும் சமமாக இந்த படத்தில் சித்தறித்திருக்கிறார் என் திரை வாழ்க்கையில் முதல் முறையாக லோகேஷ் கதை சொன்னதை நான் ரெக்கார்ட் செய்து இருக்கிறேன் வீட்டிற்கு சென்றவுடன் அதை திரும்பத் திரும்ப கேட்பேன்.

எனக்கு தேவைப்பட்ட சில மாற்றங்களையும் அவரிடம் கூறினேன் நான் சொன்னதைகேட்டு சைமன் கதாபாத்திரத்தை செதுக்கியிருப்பது எனக்கு பிடித்திருக்கிறது.

ரஜினி சார் படப்பிடிப்பின் போது என்னிடம் வந்து பேசினார் என்னை சிறிது நேரம் அப்படியே உற்று நோக்கினார் நீங்கள் இப்படி இருப்பீர்கள் என்று நினைத்திருந்தால் லோகேஷ் இடம் நாகர்ஜுனாவை படத்தில் நடிக்க வைக்க வேண்டாம் என்று சொல்லி இருப்பேன் என்று கூறி வருத்தப்பட்டார்.

தாய்லாந்தில் 17 நாட்கள் ஆக்சன் காட்சிகளை படமாக்கினோம் கிட்டத்தட்ட 350 பேர் வேலை பார்த்திருப்பார்கள் அவர்கள் அனைவரையும் கூப்பிட்டு ஒவ்வொருவருக்கும் ஒரு கவர் கொடுத்து வீட்டிற்கு செல்லும் பொழுது குழந்தைகளுக்கு ஏதாவது வாங்கி சொல்லுங்கள் என்று கூறினார்.

நல்ல குணம் படைத்த மாமனிதர் என்று நாகர்ஜுனா ரஜினியை புகழ்ந்து தள்ளிவிட்டார்.

What do you think?

TVK இரண்டாவது மாநில மாநாடு தேதி அறவிப்பு

90…ராவது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை M.N.Rajam