நடிகர்களுக்கு மட்டும் சலுகை கொடுக்கின்றனர் ராதிகா மதன் வருத்தம்
ஹாலிவுட் நடிகை ராதிகா மதன் புதுதில்லியில் நடன பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றியவர். 2014 ஆம் ஆண்டு, கலர்ஸ் டிவியின் மேரி ஆசிகி தும் சே ஹாய் என்ற தொலைக்காட்சி தொடரில் நடிகர் சக்தி அரோராவுக்கு ஜோடியாக அறிமுகமானார்.
ராதிகா மதன் சினிமா துரையில் உள்ள ஏற்ற தாழ்வு குறித்து வருத்ததுடன் பதிவிட்டுள்ளார்.
நடிகைகள் எல்லாம் 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை நடிக்கிறார்கள் நான் டைரக்டர் சொல்லும் நேரம் வரை உழைக்கிறேன் ஆனால் சில நடிகர் நடிகைகள் அப்படி உழைப்பது கிடையாது சில நடிகர்கள் 8 மணி நேரம் கூட உழைப்பது கிடையாது.
நாங்கள் எங்கள் சூழ்நிலையை சொல்லி பர்மிஷன் கேட்டால் கூட கொடுப்பதில்லை ஆனால் நடிகர்கள் கேட்டால் உடனே பர்மிஷன் கொடுத்து விடுகிறார்கள்.
நடிகர்களுக்கு வழங்கப்படும் சலுகை நடிகைகளுக்கு கிடைப்பதில்லை இந்த நிலை மாறினால் மட்டுமே சினிமாதுறை முன்னேற்றம் அடையும் என்று கூறியுள்ளார்.