யோகியமுள்ள, திராணிவுள்ள முதலமைச்சர் ஏன் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார் ஆர்.பி.உதயகுமார் கேள்வி
தன்மானமுள்ள, மானமுள்ள, யோகியமுள்ள, திராணிவுள்ள முதலமைச்சர் மூன்றாண்டு ஏன் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார். அவருக்கு ஜன்னி காய்ச்சல் வந்துவிட்டதா இல்லை ஞாபக மறதி வந்துவிட்டதா என்ன காரணம். அவர் கூறவில்லை என்றாலும் அவரது கொத்தடிமைகள் கூறட்டும் என தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள் என ஆர்.பி.உதயகுமார் தஞ்சாவூரில் பேட்டி.
அண்ணா பல்கலைக்கழகம், திருவிடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற பாலியில் குற்றச்சம்பவங்களை கண்டித்தும், உரிய நடவடிக்கை எடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்தும் தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும் – சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவருமான ஆர்.பி.உதயகுமர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆர்.பி. உதயகுமார், ஒருங்கிணைந்த தஞ்சை தரணியில் ஒன்று திரண்டிருப்பதை பார்த்து நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்ற ஸ்டாலின் அவர்கள் குளிர் காய்ச்சல் வந்து தமிழகத்திற்கு திரும்பினாலும் ஆச்சரியம் இல்லை. மூன்றாண்டு நிதி ஆயோக் கூட்டத்தை புறகணித்து விட்டு இப்போது யார் அந்த சார், யார் அந்த தம்பி, யார் அந்த தியாகி, யார் அந்த விஐபி, யார் அந்த குற்றவாளி என தமிழக மக்கள் எழுப்புகின்றன கேள்வியில் இருந்து அவர்களை காப்பாற்றுவதற்காக இன்று டில்லி செல்கிறாரோ என அய்யம் தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மற்றும் அவரது கைத்தடிகள், கொத்தடிமைகள் வைத்து கொண்டு உளறி வருவதையும் – வாந்தி எடுத்து வருவதையும் மக்கள் ஒரு நாளும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
23 மூன்றாம் புலிகேசி மூன்று வருசம் ஏன் போகவில்லை, தன்மானமுள்ள, மானமுள்ள, யோகியமுள்ள, திராணிவுள்ள முதலமைச்சர் மூன்றாண்டு ஏன் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார். அவருக்கு ஜன்னி காய்ச்சல் வந்துவிட்டதாக இல்லை ஞாபக மறதி வந்துவிட்டதா என்ன காரணம். அவர் கூறவில்லை என்றாலும் அவரது கொத்தடிமைகள் கூறட்டும். தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள். அப்போது சந்தேகம் வருகிறது. யார் அந்த சார், யார் அந்த தம்பி, யார் அந்த தியாகி, யார் அந்த விஐபி என்பதால் போகிறார். நாட்டு மக்களுகாக போகவில்லை – தன் வீட்டு மக்களுக்காக போகிறார் என அவர் குற்றம்சாட்டினார்.