in

புரட்டாசி மாத பிறப்பு முன்னிட்டு புஷ்பங்கி கருட சேவை

புரட்டாசி மாத பிறப்பு முன்னிட்டு புஷ்பங்கி கருட சேவை

 

புரட்டாசி மாத பிறப்பு முன்னிட்டு திருவேங்கடநாதபுரம் அருள்மிகு வெங்கடாஜலபதி திருக்கோவிலில் நூற்றாண்டு பழமையான வெங்கல கருடனில் சுவாமி எழுந்தருளி புஷ்பங்கி சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற வைணவத் தலங்களில் ஒன்றானதும் பக்தர்களால் தென்திருப்பதி என அழைக்கப்படும் திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி திருக்கோவில் தாமிரபரணி நதிக் கரையில் சிறுகுன்றின் மீது அமைந்துள்ளது.

இங்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடாசலபதிபெருமாள் அருள்பாலித்து வருகின்றார்.

குன்றின் கீழே வரதராஜா் தன் தேவியருடன் அருள்பாலித்து வருகின்றார். இந்த கோவிலில் புரட்டாசி மாதம் நடைபெறும் கருட சேவை உற்சவம் விமர்சையானதாகும் புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு புஷ்பங்கி சேவை நடைபெற்றது.

100 வருடங்களுக்கு முன் கருடவாகனம் பின்னப்பட்டதை தொடா்ந்து முழுவதும் வெங்கலத்தால் ஆன கருடவாகனம் செய்யப்பட்டது. புது வாகனம் வெள்ளோட்டத்தில் கருடவாகனம் கோவிலிருந்து வெளியே கொண்டுவரமுடியாதபடி அளவுக்கு கனம் வந்திருக்கிறது.

பிரச்சன்னம் போட்டு பாா்த்ததில் இந்த கருடவாகனம் வெளியே செல்லக்கூடாது என உத்திரவு வந்திருக்கிறது. அன்று முதல் இந்த கருட வாகனத்தில் பெருமாளை ஏழுந்தருளசெய்து ஆண்டுக்கு ஒருமுறை புஷ்ப அங்கி கருட சேவை நடைபெறுகின்றது.

இந்த விழாவிற்காக கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாமிக்கு திருமஞ்சனம் நடந்தது . மாலையில் ஸ்ரீ ஸ்ரீனிவாசா் சிறப்பு அலங்காரத்தில் பொிய திருவடியான கருடாழ்வாா் மீது அமா்நது காட்சி கொடுத்தாா்.

கருடவாகனத்தில் அமா்நது காட்சி கொடுக்கும் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு நட்சத்திர ஆரத்தி,கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. புஷ்பாங்கி கருட சேவையின் முக்கிய நிகழ்வான சுவாமி வெங்கடாஜலபதி கையில் கருடசேவை பொறிக்கப்பட்ட வெள்ளி செங்கோலை எடுத்து கருடவாகனத்தை வலம் வந்தனா். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்

What do you think?

எங்களது கோரிக்கை பத்து நாளுக்குள் நிறைவேற பட்சத்தில் பிச்சை எடுக்கும் போராட்டம் அறிவிப்பு

தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி வரி குறைப்பு அமைந்துள்ளது கருப்பு முருகானந்தம் தெரிவித்தார்