in

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் ஆவணி பெருவிழா தேரோட்டம்

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் ஆவணி பெருவிழா தேரோட்டம்

 

பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் ஆவணி பெருவிழா தேரோட்டம் 8 ஆண்டுகளுக்கு பிறகு மயிலாட்டம், கோலாட்டம், வான வேடிக்கையுடன் கோலாகலமாக நடைப்பெற்றது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

இந்த கோவிலில் மூலவரான அம்மன் புற்றாக உருவாகி அருள்பாலித்து வருகிறார்.

இதன் காரணமாக மூலவர் சன்னதிக்கு எந்தவிதமான அபிஷேகங்களும் செய்வது கிடையாது.

இத்தகைய சிறப்புடன் விளங்கும் இக்கோவிலின் ஆவணி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நடைப்பெற்றது.

முன்னதாக மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீபாராதனை காட்டப்பட்டன்

பின்னர் தொம்பை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட திரித்தேரில் அம்மன் எழுந்தருள ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாயே மகமாயி என பக்தி கோஷமிட்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

மயிலாட்டம், பெண்கள் கோலாட்டம், வானவேடிக்கையுடன் ராஜ வீதிகளில் தேர் வலம் வந்தன.

8 ஆண்டுகளுக்கு பிறகு திருத்தேரோட்டம் இந்த ஆண்டு நடந்துள்ளது.

What do you think?

மயிலாடுதுறையில் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது 

தஞ்சை மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் ஓரணியில் தமிழ்நாடு