புதுச்சேரி பிரான்ஸ் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த வெளிநாட்டவர் பங்கேற்ற பொங்கல் விழா பள்ளி குழந்தைகளுடன் நடனமாடி பொங்கல் வைத்து மகிழ்ச்சி
புதுச்சேரி முத்துப்பிள்ளை பாளையத்தில் உள்ள ஸ்டார் இன்டர்நேஷனல் பள்ளியில் இன்று பொங்கல் விழா நடைபெற்றது ..பூ மற்றும் கரும்புகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த பள்ளி வளாகத்தில் பானை வைத்து ஆசிரியர்கள் பொங்கல் வைத்தனர்.


விழாவில் சிறப்பு விருந்தினராக இத்தாலி மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பொங்க பானையில் அரிசி மற்றும் வெல்லமிட்டு “பொங்கலோ பொங்கல்” என கூவி மகிழ்ந்தனர்.

தொடர்ந்து பள்ளி மாணவர்கள் விஜய் பாடலுக்கு புத்தாண்ட போட அவருடன் வெளிநாட்டவர் இணைந்து மகிழ்ந்தனர் .


