in

கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

 

பாதாள சாக்கடை கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு- பரபரப்பு

தஞ்சாவூா் மாநகராட்சி 20-வது வார்டு சீனிவாசபுரம் பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்கு பள்ளிகள், வங்கி, ஆஸ்பத்திரி, வணிக வளாகங்கள் உள்ளன. இங்குள்ள ராஜன் ரோடு, காமராஜ் ரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டியில் இருந்து கடந்த 6 மாதங்களாக கழிவு நீர் வெளியேறி சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பல இடங்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது.

இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 20-வது வார்டு கவுன்சிலர் சரவணன் மற்றும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் இதுவரை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இன்று காலை சீனிவாசபுரம் ராஜன் சாலையில் கவுன்சிலர் சரவணன் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன், முன்னாள் கவுன்சிலர் சுவாமிநாதன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சாலையில் கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடுவதை தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இன்னும் ஓரிரு நாளில் பாதாள சாக்கடை சாலையில் ஓடுவதை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக் கொண்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த மறியலால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What do you think?

சிவகங்கை அருள்மிகு ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் கிருஷ்ண பகவானுக்கு சிறப்பு ஆராதனை

பயணியர் நிழற்குடையில் அமர்ந்து தேநீர் அருந்திய அமைச்சர் எ.வ.வேலு