மாங்காய் 10 கிலோ 100 ரூபாய் என்று குறைவாக விற்பனை செய்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி
கலைஞர் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு தனியார் காய்கனி மொத்த விற்பனை கடையில் மாங்காய் 10 கிலோ 100 ரூபாய் என்று குறைவாக விற்பனை செய்வதால் பொதுமக்கள் மகிழ்ச்சி.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த திருஇந்தளூரில்
ஆஞ்சநேயர் கோயில் அருகில் மதுரா பத்மஸ்ரீ என்ற காய்கனி மொத்தம் மற்றும் சில்லரை வியாபாரம் கடை உள்ளது இந்த கடையில் தமிழக முதல்வர் கலைஞரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று அதிரடி விலையில் மாங்காய் 10 கிலோ 100 ரூபாய், தக்காளி 5 Kg 50 ரூபாய், கோஸ் 5 கிலோ 50 ரூபாய், கத்தரிக்காய் 6 கிலோ 100 ரூபாய், கொத்தவரங்காய் 6 கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதனை அறிந்த சுற்றுவட்டார ஊர்களில் இருந்து பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து காய்கனிகளை மொத்தமாகவும் சில்லறையாகவும் வீடுகளுக்கு வாங்கி செல்கின்றனர் இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இக்கடையில் உரிமையாளர் கூறுகையில் நாங்கள் பாரம்பரியமாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் குடும்ப உறுப்பினர்கள் இருந்து வருகிறோம் இன்று தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு மாங்காய் 10 கிலோ 100 ரூபாய்க்கு அதிரடி விலையில் விற்பனை செய்து வருகிறோம் நாங்கள் நேரடியாக இயற்கை விவசாயிகள் இடம் இருந்தும் மற்றும் நேரடியாக ஊட்டி மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி கொடைக்கானல் போன்ற ஊர்களில் இருந்து காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்யப்படுவதால் எங்களால் விலை குறைவாக கொடுக்க முடிகிறது.

இதனால் பொதுமக்களுக்கு பயன்படும் வகையிலும் ஏழைகள் பயன்பெறும் வகையிலும் நாங்கள் இந்த விலையில் குறைந்த லாபத்தில் விற்பனை செய்து வருகிறோம் எங்களிடம் வாங்கும் ஏழை எளியவர்கள் எங்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்க முடியாத காய்கறிகள் கூட நாங்கள் வாங்கி பயனடைய செய்துள்ளீர்கள் என்று வாழ்த்தி செல்வதாக கூறினார்.


