சோற்று சட்டியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் காத்திருப்பு போராட்டம்
தமிழக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் சோற்று சட்டியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு கொரோனா காலகட்டத்தில் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது ஆனால் இதுவரை வழங்கப்படவில்லை.ஊராட்சி செயலர் உள்ளிட்ட மாவட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு நிரந்தர பணியிடத்தில் பணி நியமனம் செய்யப்பட வேண்டும், ஊராட்சியில் பணிபுரியும் அனைத்து தற்காலிக பணியாளர்களுக்கும் குடும்ப நல நிதி வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சோற்று சட்டியுடன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது சங்கத்தின் மாவட்ட செயலாளர் தமிழ்மலர் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட தலைவர் மாதவன்ராஜ் ஏஐடியுசி மாவட்ட தலைவர் ராஜ்மோகன் மாவட்ட பொதுச் செயலாளர் ராமன் மற்றும் ஏராளமான தூய்மை பணியாளர்கள் OHD ஆப்ரேட்டர்கள் மற்றும் திரளான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

கையில் சோற்று சட்டி ஏந்தி தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


