in

உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

 

கும்பகோணத்தில் உரிமை குரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் அது தெளிவா சொல்லுங்களேன் ஆர்டிஓ அலுவலகங்களில் நடைபெறும் லஞ்சம் மற்றும் இடைத்தரகர்கள் செய்யும் அட்டூழியங்களை ஒழிக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்பகோணத்தில் உரிமைகுரல் ஓட்டுநர் தொழிற்சங்கம் சார்பில் சொந்த பயன்பாட்டு கார்களை வாடகைக்கு பயன்படுத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் வாடகை வாகனங்களை ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை சீர்ழிக்கும் நவகிரக மற்றும் ஆறுபடை வீடுகளுக்கு தேய்க்கப்படும் பேருந்துகளை தடை செய்யக்கோரியும் ஆர்டிஓ அலுவலகங்களில் நடைபெறும் லஞ்சம் மற்றும் இடைத்தரகர் செய்யும் அட்டூழியங்களை ஒழிக்க கோரியும் 12+1 ஆக இருக்கக்கூடிய மேக்ஸி கேப் வாகனங்களுக்கு சீட்டு எண்ணிக்கை உயர்த்தி பர்மிட் தர கோரி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தலைவர் சுடர் வேந்தன், தலைமையில் பழைய மீன் மார்க்கெட் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநில பொதுச் செயலாளர் ஜாகிர் ஹுசைன், மாநிலச் செயலாளர் சிங்காரம், மாவட்ட துணைச் செயலாளர் மாதவன், மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

What do you think?

ஊத்துக்காடு அருள்மிகு தேதி ஸ்ரீ எல்லம்மன் தேவஸ்தானம் தெப்பல் உற்சவம்

கொள்ளிடம் ப்ரத்யங்கராதேவி ஆலயத்தில் 100 கிலோ மிளகாயை கொண்டு நிகும்பலா யாகம்