எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறையில் தேவேந்திர குல வேளாளர்கள் தங்களை எஸ்.சி பட்டியலில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை தாலுக்கா அலுவலகம் முன்பு தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் தங்களை எஸ்.சி. பட்டியல் இனத்தில் இருந்து நீக்கி பி.சி.பட்டியலில் சேர்க்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேவேந்திரகுல வேளாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் மயில்வாகணன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி பேசி கவனஈர்ப்பு முழக்கம் எழுப்பினர்.