in

இலவச வீட்டுமனை பட்டா குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோறி கண்டன ஆர்ப்பாட்டம்

இலவச வீட்டுமனை பட்டா குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோறி கண்டன ஆர்ப்பாட்டம்

 

இலவச வீட்டுமனை பட்டா குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோறி மல்லியம் கிராமத்தில் பல்வேறு கட்சியினர் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை அருகே மல்லியம் கடைவீதியில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தரக்கோறி பாஜக அதிமுக பாமக விசிக உள்ளிட்ட கட்சியினர் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் முறையாக குடிநீர் வசதி செய்து தரப்படாததை கண்டித்தும், 50 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் தலித் மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க கோரியும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் அரசு வீடுகள் முறையாக கட்டித் தரவில்லை என்று குற்றம் சாட்டி பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் கோவி.சேதுராமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் கட்சி,தேமுதிக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்து முழக்கமிட்டனர்..

What do you think?

 10 நாட்கள் திருவிழாவில் 750 டன் குப்பை 

நெகிழி சேகரிக்கும் இயக்கம் மூலம் திண்டுக்கல் நெகிழி பயன்பாட்டை குறைக்க நடவடிக்கை