நிலத்தடிநீர் எடுப்பிற்கு வரிவிதிக்கும் மத்திய அரசின் புதிய அறிவிப்பானை நகல் எரிப்பு போராட்டம்.
சீர்காழியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் புதிய பேருந்துநிலையம் அருகே நிலத்தடிநீர் எடுப்பிற்கு வரிவிதிக்கும் மத்திய அரசின் புதிய அறிவிப்பானை நகல் எரிப்பு போராட்டம்.
நிலத்தடி நீர் கட்டுப்பாடற்ற முறையில் வெளியே எடுத்து பயன்படுத்தப்படுத்தப்படுகிறது என இதை முறைப்படுத்திடும் வகையில் விவசாயிகள் சாகுபடிக்காக வெளியே எடுக்கும் நீரை அளவீடு செய்து விவசாயிகளுக்கு வரி விதித்திடவும்,
மாநில அரசுகளோடு இணைந்து இத்திட்டத்தை அமலாக்கிட 1600 கோடி ரூபாய் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளதை கண்டித்து,

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் வீரராஜ் தலைமையில் நடைபெற்றது. மத்திய அரசின் உத்தரவு நகலை எரித்து கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.


