‘SSMB 29 படத்தை பற்றி பகிர்ந்து கொண்ட பிருத்விராஜ்
தற்காலிகமாக SSMB 29 என்று பெயரிடப்பட்டுள்ள படத்தை சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு..வை வைத்து இயக்குகிறார் எஸ்.எஸ். ராஜமௌலி.
பான்-இந்தியா Movie..யாக உருவாகி வரும் இப்படத்தில் பிரியங்கா சோப்ரா மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் அளித்த பேட்டியில், பிருத்விராஜ் சுகுமாரன் ராஜமௌலியின் திரைப்படத் தயாரிப்பு அணுகுமுறை பற்றிய கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.
ஸ்கேல் ஒருபோதும் கதையாக இருக்க முடியாது; அது வெறும் கேன்வாஸ்.
ராஜமௌலி சார் பெரிய பின்னணிகளைத் தேர்வு செய்கிறார், ஏனெனில் அவர் பெரிய, காட்சி ஸ்ட்ரோக்குகள் மூலம் ஒரு கதையைச் சொல்வதில் வல்லவர் ” பிரமாண்டத்தையும் வலுவான உணர்ச்சிபூர்வமான கதைகளையும் கலப்பதில் திறமையானவர்.
கதை சொல்லும் ஆழத்தில் சமரசம் செய்யாமல் காட்சி ரீதியாக சொல்லுவார். ராஜமௌலி ஒரு ஸ்கிரிப்டை வடிவமைத்தால், அதை வேறு யாராலும் செய்ய முடியாத அளவில் செயல்படுத்திவிடுவார்.
தெலுங்கு சினிமாவின் எல்லா காலத்திலும் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் ராஜா மௌலி என்று புகழ்ந்து தள்ளிவிட்டார்.
ஏற்கனவே மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த மெகா படத்தின் மீதான எதிர்பார்ப்பை பிருத்விராஜ் மேலும் கூட்டிவிட்டார்.


