750 ஏக்கரில் புதிய தொழிற்பேட்டைக்கான அடிக்கலை பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 22 ஆம் தேதி நாட்டுகிறார்
புதுச்சேரி அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில் உயர்த்தப்பட்ட முதியோர், ஆதரவற்றோருக்கான உதவித்தொகை, சிகப்பு நிற ரேஷன் அட்டை வைத்திருக்கும் மகளிருக்கு மாதந்திர உதவித் தொகை ரூ.1000லிருந்து ரூ.2500 உயர்த்தி வழங்கும் விழா வில்லியனூர் அருகேயுள்ள திருக்காஞ்சியில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் பயனாளிகளுக்கு இந்த உதவிகளை வழங்கி முதல்வர் ரங்கசாமி பேசுகையில், கடந்த காங்கிரஸ் ஆட்சியில் மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. துணைநிலை ஆளுநருடன் சண்டை போடுவதிலேயே காலத்தை வீணாடிக்கி விட்டனர் என்றார்..

புதுச்சேரி அரசு 750 ஏக்கர் நிலத்தை கையப்படுத்தியிருந்தது. இது தொடர்பாக மத்திய அரசுக்குக் கடந்த ஆட்சியாளர்கள் அனுப்பிவிட்டனர். இப்போது அந்த இடத்தில்தான் புதிய தொழிற்பேட்டைஅமைக்க இருக்கிறோம். புதுச்சேரிக்கு வரும்போது இதற்காக இம்மாதம் 22 ஆம்தேதி நம் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிஅடிக்கல் நாட்டுகிறார்.
இதனால் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் புதுச்சேரியில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்றார்.
புதுச்சேரியில் அரசு துறையில் 4500 பேருக்கு வேலைவாய்ப்புக் கொடுத்துள்ளோம். மேலும், தேர்தல் நெருங்குகிறது. இதைக் கருத்தில் கொண்டு அரசு துறைகளில் புதிய நியமனங்கள் தொடர்பாக அட்டவணையை வெளியிட்டுள்ளோம். .
அதனால் தேர்தல் அறிவிப்பு இதைக் கட்டுப்படுத்தாது என்றார் முதல்வர் ரங்கசாமி. சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், சமூகநலத்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார்,சட்டப்பேரவை துணைத் தலைவர் ராஜவேலு மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

