in

ரயில் மறியல் போராட்டம் பாதுகாப்பணியில் போலீசார்

ரயில் மறியல் போராட்டம் பாதுகாப்பணியில் போலீசார்

 

ரயில் மறியல் போராட்டம் காரணமாக 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டம் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று மாலை சுமார் 4 மணியளவில் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம் விரைவு ரயிலை தங்கச்சிமடத்தில் மீனவர்கள் மறித்து ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

மீனவர்கள் நடத்த உள்ள இந்த போராட்டம் காரணமாக 8 டிஎஸ்பி 16 ஆய்வாளர்கள் என 859 போலீசார் மற்றும் ரயில்வே போலீசார் என நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக தங்கச்சிமடத்தில் குவிந்துள்ளனர்.

What do you think?

Leo Collection..னை முறியடிக்குமா???? கூலி

தாராபுரத்தில் அரக்க முக முக முடிய அணிந்து நூதன கண்டன ஆர்ப்பாட்டம்..