in

புதிய பொறுப்பாளர்களை பாமக நிறுவனர் ராமதாஸ் நியமனம்

புதிய பொறுப்பாளர்களை பாமக நிறுவனர் ராமதாஸ் நியமனம்

 

கடலூர் மேற்கு மாவட்ட முழுவதுமே, நகர, ஒன்றிய பொறுப்பாளர்களை நீக்கிவிட்டு, புதிய பொறுப்பாளர்களை பாமக நிறுவனர் ராமதாஸ் நியமனம் செய்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ச்சியாக அன்புமணி ஆதரவாளர்களை நீக்கிவிட்டு இதுவரை 80 க்கும் மேற்பட்ட புதிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்துள்ளார்.

இந்த நிலையில் தொடர்ச்சியாக மயிலம், சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார், சேலம் எம் எல் ஏ சதாசிவம், தர்மபுரி வெங்கடேஸ்வரன் எம்எல்ஏ கட்சிப் பதவிகளை நீக்கிவிட்டு புதிய மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்துள்ளார்.

இந்த நிலையில் இன்று கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி கே சுரேஷ் தலைமையில் வந்த 200 க்கும் முன்னாள் பாமக நிர்வாகிகளுக்கு தற்போது ஒன்றிய நகர, பொறுப்புகளை பாமக நிறுவனர் ராமதாஸ் நியமனம் செய்துள்ளார்.

இறுதி மூச்சு இருக்கும் வரை… அன்புமணி செயல் தலைவர் தான்: ராமதாஸ் உறுதி விழுப்புரம்: கருணாநிதி பாணியில் நான் தலைவராக இருப்பேன். ஸ்டாலின் போன்று அன்புமணி செயல் தலைவராக இருக்க வேண்டும் என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது பிரச்னை அல்ல

இது அரசியல் கட்சி நடத்தும் எல்லோருக்கும் வேண்டுகோளாக வைக்கிறேன். மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்த கூடாது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் பொதுக்குழு கூட்டப்படும். தேவைப்படும் நேரத்தில் கூட்டணி குறித்து முடிவு செய்வோம். பா.ம.க.,வை நான் வளர்த்தது போல் இந்தியாவில் யாரும் இல்லை. அன்புமணி மன்னிப்பு கேட்கிறாரா? இல்லையா? என்பது பிரச்னை அல்ல. மூச்சு இருக்கும் வரை….!

பா.ம.க.,வில் நிலவும் பிரச்னை குறித்து பேசிக்கொண்டே இருக்கிறோம். எல்லா பிரச்னைக்கும் ஒரு முடிவு உண்டு; அந்த முடிவு இன்னும் வரவில்லை. நான் தொடங்கிய கட்சியை 96 ஆயிரம் கிராமங்களுக்கு சென்று வளர்த்தேன். நான் சென்ற முறை சொன்னேன். மீண்டும் சொல்கிறேன். பா.ம.க.,வை வளர்த்தது நான் தான். மூச்சு இருக்கும் வரை கட்சிக்கு தலைவராக செயல்படுவேன்.

நல்ல பொறுப்புகள் கருணாநிதி பாணியில் நான் தலைவராக இருப்பேன். ஸ்டாலின் போன்று அன்புமணி செயல் தலைவராக இருக்க வேண்டும். இப்போது முதல்வராக இருக்கும் ஸ்டாலின், அப்போது முணு முணுக்க வில்லை. கட்சியில் இருப்பவர்களுக்கு நல்ல பொறுப்புகளே கொடுத்து இருக்கிறேன். நான் புதிதாக அளித்த பொறுப்புகள் எல்லாம் நிரந்தரம் தான். இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
ஜி.கே. மணியின் மகன் மற்றும் முகுந்தனை இளைஞர் அணி தலைவராக அன்புமணி ஏன் ஏற்கவில்லை என்ற கேள்விக்கு, ”யாம் அறியேன் பராபரமே, யாம் அறியேன் பராபரமே, யாம் அறியேன் பராபரமே” என ராமதாஸ் பதில் அளித்தார்.

What do you think?

நெட்டிசன்களின் ட்ரோல்..லை தாங்க முடியாமல் அமிதாப் பச்சனின் குரலை நீக்கிய அரசாங்கம்

மார்கன் படத்தின் முதல் 6 நிமிட காட்சி வெளியிடப்பட்டது