பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசின் 87 வது பிறந்த நாளை பிரமாண்ட உருவத்தினை ஏற்படுத்தி வாழ்த்து
பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசின் 87 வது பிறந்த நாளை முன்னிட்டு வெள்ளை நிற உடையணிந்த 1500 கல்லூரி மாணவ மாணவிகள் கைகோர்த்து அணிவகுத்து நின்று மருத்துவர் ராமதாசின் பிரமாண்ட உருவத்தினை ஏற்படுத்தி வாழ்த்து தெரிவித்தனர். 87 மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி நின்று சிலம்பம் சுற்றி அசத்தினர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாசின் 87 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிற நிலையில் மருத்துவர் ராமதாசிற்கு பிரதமர் மோடி, அமித்ஷா, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, டி டி வி தினகரன் உள்ளிட்ட பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர் மோடி அமித்ஷா முதலமைச்சர் ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மருத்துவர் ராமதாஸ் நன்றியை தெரிவித்து ஒரு சொட்டு மதுவில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டுமென மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையிலை திண்டிவனம் அருகேயுள்ள கோனேரிக்குப்பத்தில் செயல்பட்டு வரும் சரஸ்வதி கலைக்கல்லூரியில் மருத்துவர் ராமதாஸ் பிறந்த நாளை முன்னிட்டு ராமதாஸ் பங்கேற்று 87 மரக்கன்றுகளை நடும் பணியை மரக்கன்று நட்டு துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து கல்லூரி மைதானத்தில் கைப்பந்து விளையாட்டு போட்டியினை விளையாடி துவக்கி வைத்த பின்னர் வெள்ளை நிற உடையணிந்த 1500 மாணவ மாணவிகள் கைகோர்த்து அணிவகுத்து நின்று மருத்துவர் ராமதாசின் பிரமாண்ட உருவத்தினை ஏற்படுத்தி வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது ராமதாஸ் மாணவர்களுடன் நின்று புகைப்படம் எடுத்து கொண்டார். அதன் பின்னர் 87 வது பிறந்த நாளை முன்னிட்டு 87 கல்லூரி மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி நின்று சிலம்பம் சுற்றி அசத்தினர். சிலம்பம் சுற்றிய நிகழ்வானது ராயல் புக் ஆப் ரெக்கார்டு புத்தகத்தில் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டன.


