in

கண்ணப்பா படத்திற்கு எதிராக நெகடிவ் Comments கொடுக்காதீர்கள்


Watch – YouTube Click

கண்ணப்பா படத்திற்கு எதிராக நெகடிவ் Comments கொடுக்காதீர்கள்

மஞ்சு விஷ்ணு நடிக்கும் புராண படமான கண்ணப்பா ஜூன் 27 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தில் பிரபாஸ், அக்ஷய் குமார், சரத்குமார் மற்றும் மோகன்லால் உள்ளிட்டோர் சிறப்பு வேடங்களில் நடித்துள்ளனர்.

Believer and Non…Believer ..குள் இருக்கும் போராட்டம் தான் First Half கதை.

நாத்திகராக இருந்த கண்ணப்பா எப்படி Siva பக்தராக மாறினார் என்பதே படத்தின் கரு.

63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்பா சிறந்த Siva பக்தர்.

Promotion நிகழ்வின் போது பேசிய சரத் குமார் பார்வையாளர்களுக்காக பகிர்ந்துகொண்ட செய்தி…உங்கள் நண்பர்களுக்கு செய்தி அனுப்பாதீர்கள் கண்ணப்பாவைப் பார்க்க லாமா….வேண்டாமா என்று அவர்களிடம் கேட்காதீர்கள்.

வெளியீட்டிற்கு முன்னதாகவும், படம் வெளியான பிறகும் படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்களைப் பரப்பாதிர்கள் ., “தயவுசெய்து படம் திரையிடப்படும் போது உங்கள் தொலைபேசியை எடுக்காதீர்கள்.

உங்கள் நண்பர்களுக்கு செய்தி அனுப்பி கண்ணப்பா படத்திற்கு வர வேண்டாம் என்று சொல்லாதிர்கள். உங்கள் பார்வை அவர்களின் பார்வையிலிருந்து வேறுபட்டிருக்கலாம்.

ஒருவேளை அவர் பிரபாஸைப் பார்க்க வந்திருக்கலாம், ஒருவேளை படம் குறித்த அவரது கருத்து வேறு மாதிரியாக இருக்கலாம்” என்றார்.

New Zealand ..டில் 120 நாட்கள் படபிடிப்பை நடத்திநோம் … புராணகதை என்பதால் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் ஷூட்டிங் எடுத்தார்கள் இன்றைய இளைஞசர்கள் தெரிந்து கொள்ளவேண்டிய கதை அதனால் படத்தை பாருங்கள். கண்ணப்பா படத்தில், சரத்குமார் நாதநாடு..வாக கண்ணப்பாவின்தந்தை வேடத்தில் நடிக்கிறார்..

பீம சேனாவைச் சேர்ந்த கோயலு பழங்குடியினரின் தலைவரும், பாண்டவர்களைச் சேர்ந்த ஹிடிம்பியும் தான் நாதநாடு, அக்‌ஷய் குமார் சிவபெருமானாக நடிக்கிறார், பிரபாஸ் ருத்ரனாக நடிக்கிறார். மோகன்லால் கிராதாவாகக் காணப்படுவார்.

“ஒரு எளிய வேட்டைக்காரனின் இறுதி தியாகம் புராணமாக மாறிய வரலாற்று மற்றும் பக்தி கதையை சக்திவாய்ந்த முறையில் கூறி இருகின்றனர்.

கண்ணப்பா உங்கள் நம்பிக்கை, காலத்தால் அழியாத தைரியம் மற்றும் தெய்வீக தொடர்பு ஆகியவற்றின் உலகிற்கு அழைத்துச் செல்வார்” என்று தயாரிப்பாளர்கள் கூறினர்.

விஷ்ணுவின் தந்தை நடிகர் மோகன் பாபு, படத்தின் தயாரிப்பாளர்.

காஜல் அகர்வால், பிரீத்தி முகுந்தன் மற்றும் பிரம்மானந்தம் ஆகியோர் இந்த படத்தில் நடிக்கின்றனர். கண்ணப்பா படத்தை ட்வென்டி ஃபோர் பிரேம்ஸ் ஃபேக்டரி மற்றும் ஏ.வி.ஏ என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளன. முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். விஷ்ணு இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார்.

What do you think?

உடல்வலி நிவாரணி போதை மாத்திரை வைத்திருந்த இருவர் கைது.

Coolie பட டைட்டில் மாற்றம்.. அதிருப்தியில் ரசிகர்கள்