திருவாடானை சிவன் கோவில் கோபுரத்தில் வளரும் செடிகளால் கோபுரத்திற்கு ஆபத்து
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அருள்மிகு ஸ்ரீ சினேகவல்லி அம்பாள் உடனமர் ஆதிரெத்தினேஸ்வரர் ஆலயம் உள்ளது.
இந்த ஆலயம் ஆயிரம் ஆண்டுகளை கடந்து கம்பீரமாக காட்சி அளிக்கும் வகையில் ஆலயத்தின் முகப்பு கோபுரம் 130 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
பல நூறு சிலைகள் கொண்ட கோபுரமாக அழகாக காட்சி அளிக்கும் நிலையில் கோவில் கோபுரத்தில் அரசமரம், வேப்பமரம் உள்ளிட்ட பல்வேறு மரசெடிகள் வளர்ந்து கோபுரத்திற்கு ஆபத்தான நிலை உள்ளது.

மேலும் கோபுரத்தில் உள்ள சிலைகளுக்கு இடையில் வளர்ந்து சிலைகள் சிதலமடைத்துள்ளது.
இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


