in

27 நட்சத்திரத்திற்கு உரிய மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி

27 நட்சத்திரத்திற்கு உரிய மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி

 

நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் 27 நட்சத்திரத்திற்குரிய மரக்கன்றுகளை நடும் நிகழ்வை துவங்கி வைத்த இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு.

நாகப்பட்டினத்தில் உள்ள அருள்மிகு காயரோகண சுவாமி உடனுறை  நீலாயதாட்சியம்மன் திருக்கோவில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு  இன்று 27 நட்சத்திரத்திற்கு உரிய மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

 

தமிழக முதல்வரின் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு உரிய செம்மரத்தை அமைச்சர்கள் நட்டு வைத்ததை தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள 27 நட்சத்திரத்திற்கும் உரிய மரக்கன்றுகள் நடப்பட்டன.

தொடர்ந்து மூலவர் மற்றும் அம்பாள் சன்னதியில் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.

What do you think?

தீவனூர் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் ஆலய பிரம்மோற்சவம்

நாமக்கல் பெரிய காண்டியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா