in

நாஞ்சிக்கோட்டையில் பன்றிகள் தொல்லை

நாஞ்சிக்கோட்டையில் பன்றிகள் தொல்லை

 

தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டையில் பன்றிகள் தொல்லை அதிக அளவில் உள்ளது.

எனவே பன்றிகளை பிடிக்கும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் அடுத்து நாஞ்சிக்கோட்டை ஊராட்சி உள்ளது. அந்த ஊராட்சியில் பன்றிகள் தொல்லை அதிகளவில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பன்றிகள் அதிக அளவில் சாலையில் சுற்றித்திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். மேலும் வீடுகளில் வளர்க்கப்படும் காய்கறி செடிகளை சேதப்படுத்து விடுகின்றது.

மேலும் இந்த பன்றிகள் அங்கு கொட்டப்பட்டு இருக்கும் குப்பைகளை கிளறுவதால் குப்பைகள் சாலையில் படர்ந்து உள்ளது. அங்கு உள்ள பன்றிகள் குப்பையை கிளறுவதன் மூலம் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசப்படுகிறது.

அந்த பன்றிகளால் கடும் இடையூறு ஏற்படுவதாக அந்த பகுதி மக்கள் பல மாதங்களாக புகார் சொல்லி வருகிறார்கள். பன்றிகள் தொல்லையால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பன்றிகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

What do you think?

நாகூர் ஆண்டவர் கந்துாரி விழா சந்தன கூடு ஊர்வலத்திற்காக சந்தனம் அரைக்கும் பணி

டாக்டர் பாரிவேந்தர் மற்றும் இளையவேந்தர் கலந்தாய்வு ஆலோசனைக் கூட்டம்