in

பெருமுக்கல் ஸ்ரீ காமாட்சியம்மன் திருக்கோயில் பாலாலயம்

பெருமுக்கல் ஸ்ரீ காமாட்சியம்மன் திருக்கோயில் பாலாலயம்

 

பெருமுக்கல் ஸ்ரீ காமாட்சியம்மன் திருக்கோயில் பாலாலயம். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் ஆயிரம் ஆண்டுகள் முற்பட்ட பழமையான திருக்கோயில் ஆன ஸ்ரீ காமாட்சியம்மன் திருக்கோயில் ரூபாய் 7.63 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் தொடக்க விழா கடந்த 22 -08-2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி மூலம் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து காலையில் கோ பூஜையுடன் இனிது பாலாலயம் தொடங்கியது. மேலும் மூலவர்கள் ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ காமாட்சி அம்மன், ராஜகோபுரம், நந்தியன் பகவான், ஆகிய தெய்வப் அத்திப் பலகையில் உருவங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

தொடர்ந்து யாக குண்டம் அமைக்கப்பட்டு அதில் பல்வேறு வகையான திரவிய பொருட்கள் வாசனைப் பொருட்கள் பழங்கள் மற்றும் பூர்ணாஹுதி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து புசிக்கப்பட்ட கலசங்கள் கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டு கலச புறப்பாடு நடைபெற்றது.

மேலும் கோயில் முன்பு குடிசை அமைக்கப்பட்டு அத்தி பலகையில் வரையப்பட்ட தெய்வங்களை பிரதிஷ்டை செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கலசங்களால் பலகையில் காட்சியளித்த தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை இந்து சமய அறநிலைத்துறையினர் செய்து இருந்தனர்.

What do you think?

ஸ்ரீ வெண்ணியம்மன் ஆலய ஆவணி மாத பௌர்ணமி ஊஞ்சல் உற்சவம்

ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் ஆலய கும்பாபிஷேக விழா