பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு
வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைகழகத்தில் நடந்த போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.
தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைப்பெற்றது.
பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து துவங்கிய பேரணியை மேயர் சண் இராமநாதன், துணை மேயர். டாக்டர். அஞ்சுகம் பூபதி, வல்லம் நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் குமார் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
10 கி.மீ. 5 கி.மீ. 3 கி.மீ என 3 பிரிவுகளில் நடந்த போட்டியில் சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.