பெரமண்டூர் கிராமம் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்
பெரமண்டூர் கிராமம் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் வட்டம் பெரமண்டூர் ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய மேலும் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இரண்டாம் கால பூஜை விநாயகர் பூஜை உடன் ஆரம்பிக்கப்பட்டது.
மேலும் புண்யாஹவசனம், கும்பாராதனம், யுக்த ஹோமம். தத்வார்ச்சனை, நாடிசந்தானம் நடைபெற்றன. தொடர்ந்து மஹாபூரணாஹுதி செலுத்தி கலசங்களுக்கு மகாதீப ஆராதனை, பஞ்சமுகத்திபாரனை, கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது.
தொடர்ந்து யாக குண்டத்தில் வஸ்திர தானம் மற்றும் கலசங்களுக்கு மகா தீபாரதனை பஞ்சமுக தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து கிராமத்தின் பாரம்பரிய தெய்வமான ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய கருவறை விமான கலசங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
தொடர்ந்து மூலவ ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு மகாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மேலும் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த ஸ்ரீ திரௌபதி அம்மனுக்கு கற்பூர ஆர்த்தி காண்பிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை திரௌபதி அம்மன் விழா உபயதாரர்கள் மற்றும் கிராம இளைஞர்கள் செய்திருந்தனர்.

