5 ஆண்டுகளுக்குப் பிறகு இயக்கப்படும் மினி பேருந்து உற்சாகத்தில் பயணிகள்
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு 30 கிராமங்கள் பயன்பெறும் வகையில் இயக்கப்படும் மினி பேருந்து உற்சாகத்தில் பயணிகள்…..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும் வகையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கப்படும் மினி பேருந்து
இனிப்புகள் வழங்கி பாபநாசம், பண்டாரவடை, தேவராயன்பேட்டை,
கோடுகிளி, மெலட்டூர் வழியாக கோவத்தக்குடி வரை மினி பேருந்து சேவையை பாபநாசம் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் துரை.சண்முக பிரபு கொடியசைத்து துவங்கி வைத்தார்.
கடந்த ஐந்தாண்டு காலமாக பேருந்து வசதி இல்லாமல் சுமார் 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஐந்தாண்டுகளுக்கு பிறகு தமிழக அரசின் உத்தரவின் பெயரில் தனியார் மினி பேருந்து இயக்கப்பட்டது.

பாபநாசத்தில் இருந்து கோவத்தக்குடி வரை 17 கிலோ மீட்டர் வரை செல்லும் இந்த பேருந்து நாள் ஒன்றுக்கு ஆறு முறை சென்று வருகிறது .
தொடர்ந்து இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.


