in

புவனகிரியில் ஊராட்சி கணினி இயக்குபவர்கள் பணி பாதுகாப்பு வேண்டி ஆர்ப்பாட்டம்

புவனகிரியில் ஊராட்சி கணினி இயக்குபவர்கள் பணி பாதுகாப்பு வேண்டி ஆர்ப்பாட்டம்

 

கடலூர் மாவட்டம் புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி தற்காலிக கணினி இயக்குபவர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புவனகிரி அருகே பு.உடையூர் ஊராட்சியில் 12-11-25 புதன் அன்று ஊராட்சியில் தற்காலிகமாக பணிபுரியும் கணினி இயக்குபவராக உள்ளவர் ஆனந்தியை நேற்றைய தினம் ஊராட்சியில் வரிவசூலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது அப்பொழுது அந்த ஊரைச் சேர்ந்த அன்பரசன் என்பவர் மது போதையில் வரி வசூலில் ஈடுபட்டிருந்த பணியாளரை பணி செய்ய விடாமல் தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு அடித்ததாக கூறப்படுகிறது .

இந்நிலையில் இதுகுறித்து காவல் நிலையத்தில் ஆனந்தி அளித்த புகாரின் பேரில் புவனகிரி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் இந்நிலையில் தற்காலிக கணினி இயக்குபவர்கள் சங்கம் சார்பில் புவனகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தற்காலிக கணினி இயக்குபவர்களுக்கு பணி பாதுகாப்பு வேண்டிய வரி வசூலில் ஈடுபடும் பொழுது பாதுகாப்ப வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் புவனகிரி , பரங்கிப்பேட்டை, குமராட்சி காட்டுமன்னார்கோயில் கம்மாபுரம் குறிஞ்சிப்பாடி அண்ணாகிராமம் பண்ருட்டி கீரப்பாளையம் உள்ளிட்ட ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளில் உள்ள கணினி இயக்குபவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இது பற்றி கணினி இயக்கம் அவர்கள் தெரிவிக்கும் பொழுது இவர்களது மாதாந்திர வருமானம் 8240 ரூபாய் மட்டுமே தொகையும் மாதம் மாதம் முழுமையாக வருவதில்லை இருந்தபோதிலும் வரி வசூல் பணியில் ஈடுபடும் எங்களை இழிவாக பேசி தாக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது .

எனவே இதனை தடுத்திடப்பட்டு பணி பாதுகாப்பு வழங்கிட வேண்டி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

What do you think?

திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப திருவிழா

மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் திருக்கல்யாணம்