in

வரலாற்று சாதனை விற்பனையில் பழனி தேவஸ்தான பஞ்சாமிர்தம்

வரலாற்று சாதனை விற்பனையில் பழனி தேவஸ்தான பஞ்சாமிர்தம்

பழனி கோவிலில் கார்த்திகை 1ம் தேதி முதல் பஞ்சாமிர்தம் தயாரிக்கும் பணிகள் 24 மணி நேரமும் இடைவெளி இல்லாமல் நடைபெற்று வருவதால் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 2,65,940 டப்பாக்கள் விற்பனை செய்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஐய்யப்ப சீசன் துவங்கியதை முன்னிட்டு கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பழனி தேவஸ்தானம் சார்பில் சுமார் 15 நிரந்தர பஞ்சாமிர்தம் விற்பனை மையங்கள் மற்றும் ஒரு தற்காலிக பஞ்சாமிர்த விற்பனை மையம் திறக்கப்பட்டுள்து.

பழனி தேவஸ்தானம் சார்பில் சுகாதார முறையில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் தரமாகவும் சுவையாகவும் இருப்பதாலும் பக்தர்கள் நலன் கருதி லாப நோக்கம் இல்லாமல் உற்பத்தி விலைக்கே வழங்கப்படுவதாலும் பக்தர்களுக்கு கூடுதல் இடங்களில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாலும் கடந்த மூன்று ஆண்டுகளாக அதிக அளவில் விற்பனை ஆகி வருவது குறிப்பிடதக்கது.

கடந்த 2023ஆம் ஆண்டு 27.12.2023 அன்று ஒரே நாளில் ஒரு லட்சத்து எழுபத்தி ஒன்பது ஆயிரத்து இருநூற்று எண்பத்தி மூன்று (1,79,283)டப்பாக்கள் விற்பனை செய்யப்பட்டு வரலாற்று சாதனை படைத்தது.

இந்த ஆண்டு ( 2025 ) நவம்பர் 19 -ம் தேதி ஒரு லட்சத்து தொன்நூற்றி எட்டாயிரத்தி நானூற்றி என்பது (1,98,480) டப்பாக்கள் விற்பனை ஆகி முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டது.

ஆனால் அதற்கு அடுத்த நாளான நேற்று அந்த சாதனையும் முறியடிக்கப்பட்டு நவம்பர் 20 -ம் தேதி இதுவரை இல்லாத வகையில் இரண்டு லட்சத்து அறுபத்தி ஐந்தாயிரத்தி தொள்ளாயிரத்தி நாற்பது (2,65,940 ) டப்பாக்கள் விற்று அதிரடி சாதனை படைத்துள்ளது.

இந்த அதிக அளவு பஞ்சாமிர்தம் விற்பனை சாதனைகளுக்கு காரணம் பழனி தேவஸ்தானம் சார்பில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் மிகத்தரமாகவும், சுவையாகவும் சுகாதாரமாகவும் இருப்பதுதான் என்றால்அது மிகையில்லை.

What do you think?

புதிய தார் சாலை அமைக்கும் பணிகளை மாநகராட்சி மேயர், ஆணையர் இன்று ஆய்வு செய்தனர்

வன்முறையே இல்லாம படம் எடுக்கவே முடியாதா? வெளியீட்டு விழாவில் தொல்.திருமாவளவன்